இந்தியா-இலங்கை உறவு! அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வெளியான தகவல்

இந்தியாவும் இலங்கையும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் ஊடாக சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் நோக்கத்தை விரிவுபடுத்த முயல்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இலங்கையின் ஏற்றுமதி திறனை மேம்படுத்துவதில் அதன் நோக்கத்தை சிறப்பாக செயற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

இந்தியா-இலங்கை உறவு! அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வெளியான தகவல் | India Sri Lanka Bilateral Relationship Santosh Jha

அத்துடன், உலகளாவிய ரீதியாக இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாகவும் அண்டைய நாடு என்ற அடிப்படையில் இலங்கை அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

உட்கட்டமைப்பு, பொருளாதாரம், எரிசக்தி பாதுகாப்பு, கலாசார பரிமாற்றம் மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு உள்ளிட்ட பலவற்றில் இலங்கை-இந்தியா இணைந்து செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த நிலையில், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.