இந்திய - இலங்கை உறவு : ஜெய்சங்கர் வெளியிட்ட தகவல்

அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் கீழ், இந்தியா கடனில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவ எப்போதும் முன்வந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

புது டெல்லியில் இடம்பெற்ற கண்காட்சி நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரத்தம் தண்ணீரை விட அடர்த்தியானது என்ற பழமொழியை நினைவூட்டிய அவர், இலங்கை நெருக்கடியான தருணங்களை எதிர்கொள்ளும்போது இந்தியா உதவுவது இயல்பான விடயம் எனத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர், இந்தியா முன்னேறுவது மிகவும் இயல்பானது.

அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற கொள்கையின் பின்னர் அயல்நாடுகள் நெருக்கடியில் உள்ள போது இந்தியா அதற்கு ஆதரவாகவே செயற்பட்டுள்ளது.

நீங்கள் ( இலங்கை ) இந்த நெருக்கடியிலிருந்து விடுபடுவீர்கள் என நான் எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் இலங்கையின் உண்மையான நண்பர்கள் இலங்கையுடன் உறுதியாக நிற்பது அவசியமாகும்.

கலாசாரம் என்பது மக்களுக்கு இடையேயான பரிமாற்றத்தின் ஒரு வெளிப்பாடாகும். இன்று நாம் பலவற்றை பரிமாறிக் கொள்கிறோம். இலங்கை எமது பகிரப்பட்ட வரலாற்றின் ஒரு பகுதியாகும்” என்றார்.