சீனாவின் ஆதிக்கம் கண்டு இந்தியா பயப்படாது! ஜெய்சங்கர் அதிரடி

“இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ள சீனாவை கண்டு நாம் பயப்பட மாட்டோம்” என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (IIM) மாணவர்களுடன் உரையாடிய ஜெய்சங்கர், கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ள சீனா, பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் தன்னை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, தெற்காசியாவில் தனது செல்வாக்கை உயர்த்தி கொள்வதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான், இலங்கை வரிசையில் மாலைதீவு அரசுடன் நெருக்கமான உறவை சீனா பேணி வருகிறது.

இது, இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள நிலையில், புதிய மாலைதீவு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு புதிய சிக்கலை உண்டாக்கியுள்ளது.

மாலைத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தை வெளியேற்ற காலக்கெடு விதித்ததில் இருந்து இந்தியாவுக்கு எதிராக மாலைதீவு அமைச்சர்கள் கருத்து தெரிவித்தது வரை தொடர் பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கிடையே, சீன உளவு கப்பல் ஒன்று இந்திய பெருங்கடலில் நுழைந்து அது மாலைத்தீவை நோக்கி சென்றதாக தகவல் வெளியானது.

மாலைதீவு தலைநகர் மாலேவை நோக்கி சீன கப்பல் சியாங் யாங் ஹாங் 03 சென்றதாக கூறப்படுகிறது. இது, இந்திய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனா ஆதிக்கம் செலுத்தும் என்பதை ஒப்புக்கொள்வது அவசியம், ஆனால், இம்மாதிரியான அரசியலை கண்டு இந்தியா பயப்படக்கூடாது.

சீனா நேராக போரிட்டால் நாம் பயப்படாமல் எதிர்கொள்ளலாம். ஆனால் இந்த குள்ளநரி சீனா, கொரோனா போன்ற கொடிய வைரஸ்களை கண்டுபிடித்து, அதை பரப்பி நம்மை கொல்ல நினைக்கின்றன.

அதையும் நாம் திறமையாக எதிர்கொண்டோம்.தடுப்பூசி கண்டுபிடித்து உயிர்பலிகளை தடுத்தோம். இப்பொழுது புதுசாக இந்த குள்ளநரி சீனா, செயற்கையாக இயற்கை பேரிடர் உருவாக்கி, இந்திய பகுதிகளில் அதிக மழை பெய்வித்து, வெள்ளம் ஏற்படுத்தி, இந்தியாவை அழிக்க சதிசெய்ய நினைக்கின்றது.

அதையும் நாம் திறமையாக எதிர்கொள்வோம். சீனாவை கண்டு நாம் பயப்படவேண்டாம். நாம் மிக மிக பயப்படவேண்டியது நம் நாட்டில் உள்ள தேச துரோகிகளை கண்டுதான்.. அவர்கள்தான் நமக்கு பெரிய எதிரி.” என தெரிவித்தார்.