இலங்கை அரசாங்கம் கோரிய 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கு இந்தியா கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதாக அறிய முடிகின்றது.அந்நியச் செலாவணி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் நெருக்கடியிலிருந்து நீண்டகால மீட்சியை இலக்காகக் கொண்ட பொருளாதார நடவடிக்கைத் திட்டத்தை சமர்ப்பிக்க இந்தியா கோரியுள்ளது.மேலும் வடக்கு மற்றும் கிழக்கில் பொருளாதாரத் திட்டங்களைத் தொடங்குவதற்கான முன்னேற்பாட்டு பட்டியலையும் இந்தியா கோரியுள்ளதாக அறிய முடிகின்றது.கடந்த வருடம் டிசம்பரில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக் கொண்ட நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய விஜயம் இரண்டு முறை இரத்து செய்யப்பட்டது.இதன் காரணமாக உணவு, எரிபொருள், மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு இன்னும் திட்டம் வகுக்கப்படவில்லை.இலங்கை எடுத்த டிசம்பர் மாதக் கடனும் இந்த வாரத்தில் செலுத்தப்பட இருந்த நிலையில், பலாலி விமான நிலையத்தை மீண்டும் திறப்பது, திருகோணமலை துறைமுக பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை இந்தியா முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            