இலங்கைக்கு இலவசமாக 63.5 மில்லியன் டொலரை கொடுத்த இந்தியா.. : வாங்க மறுத்த அநுர.. : காரணத்தை வெளிப்படுத்துமாறு கோரிக்கை

 


காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு 63.5 மில்லியன் டொலரை இலவசமாக வழங்குவதற்கு இந்தியா முன்வந்த போது அரசாங்கம் ஏன் அதனை பெறவில்லை என்பதற்கு அரசினால் உரிய பதில் வழங்கப்படவில்லை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
 

பாராளுமன்றத்தில் நேற்று இதனைத் தெரிவித்த அவர்,
 

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு 63.5 மில்லியன் டொலரை இலவசமாக வழங்குவதற்கு இந்தியா முன்வந்த போது அரசாங்கம் ஏன்அதனை பெறவில்லை என்பதை அறியமுடியவில்லை.
இந்த விடயம் தொடர்பில் துறைமுக அதிகார சபையின் தலைவரிடம்கேள்வியெழுப்பிய போது அதற்கு அவர் முறையாக பதிலளிக்கவில்லை.
தென்னிந்தியாவின் பொருளாதாரம் இலங்கையின் பொருளாதாரத்தை விடவும் முன்னிலையில்உள்ளது.

ஆகவே இலங்கை  இந்திய வர்த்தக வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாம் முனைய அபிவிருத்தி பணிகளை தாமதப்படுத்தியமை பாரிய மோசடி என்று போக்குவரத்து அமைச்சர் குறிப்பிடுகிறார்.
அபிவிருத்தி பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் போது திட்ட மதிப்பீடுகளுக்கு மேலதிகமாக 55 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த திட்டத்தை நெருக்கடிக்குள்ளாக்கியவர்கள் தொடர்பில்ஆராய்வதற்கு விசேட ஆணைக்குழுவை நியமித்து பொறுப்புக் கூற வேண்டியவர்களைசட்டத்தின் முன் நிறுத்துங்கள் என்றார்.


இதேநேரம் இங்கு உரையாற்றிய ஹர்ச டி சில்வா எம்.பி.


பொருளாதார மறுசீரமைப்புக்கு பின்னர் 500 மில்லியன் டொலர் கடன் பெறப்படவுள்ளது. அரச கடன் முகாமைத்துவ சட்டத்தின் 8 ஆம் பிரிவில் "கடன் தொடர்பில்தொடர்பாடல் குழு ஒன்று நியமிக்கப்படவேண்டும், ஒரு மாதத்துக்கு ஒருமுறை கூடிகுறித்த கடன் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே 500 மில்லியன் டொலர்கடன் தொடர்பில் தொடர்பாடல் குழுநியமிக்கப்பட்டதா, அறிக்கை பெறப்பட்டதா எ ன்று நிதியமைச்சரிடம் கேட்கிறேன்.

இதற்கு பதிலளிப்பதற்கு சபையில் எவருமில்லை.வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த
முடியாத காரணத்தால் நாடு நிதியியல் ரீதியில் வங்குரோத்து நிலையடைந்தது. அரசகடன் முகாமைத்துவ சட்டத்தில் "அரசகடன் தொடர்பான திணைக்களம்' ஊடாகவே அரசமுறை கடன் பெறுவதற்கானநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதாரமறுசீரமைப்பின் பின்னர் முதன் முறையாக500 மில்லியன் டொலர் கடன் பெறுவதற்குஉத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்நடவடிக்கை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றார்.