வியக்கத்தக்க வகையில் உயிர் பிழைத்த சிறுவன்: அதிகம் பகிரப்படும் காணொளி

சிற்றூந்து ஒன்று மோதி பின்னர், அந்த சிற்றூந்தினால் இழுத்து செல்லப்பட்டு, சில்லு தம்மீது ஏறிய போதும் உயிர் பிழைத்த சிறுவனின் காணொளி வெளியாகியுள்ளது.

இந்தியாவின் (India) மகாராஸ்டிராவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிற்றூந்து ஒன்று புறப்படும் வேளையில் சிறுவன் ஒருவர், அதற்கு முன்னால் சென்று விளையாடியுள்ளார். 

சிறுவனை மோதிய சிற்றூந்து

இதன்போது, சிற்றூந்து ஓட்டுநர், சிறுவனை காணாத நிலையில், குறித்த சிற்றூந்து சிறுவனை மீது மோதியுள்ளது. 

இதன் பின்னர் சிறுவன் சிற்றூந்தினால் இழுத்துச்செல்லப்பட்டு இறுதியில் சிற்றூந்தின் பின் சில்லு உடம்பில் ஏறிய நிலையில், சிறுவன் எழுந்து நின்று, அழும் காட்சி காணொளியாக பதிவாகியுள்ளது.

இத்ததைகைய விபத்துக்கு பின்னரும் குறித்த சிறுவன் உயிர்பிழைத்துள்ளமை பலரின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அக்காணொளி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.