இந்தியாவின் புதிய நகர்வு - இலங்கையில் நடைமுறையாகும் புதிய திட்டம்..!

இலங்கைக்கு பயணம் செய்யும் இந்திய சுற்றுலா பயணிகள் உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இணைய நிகழ்வு ஒன்றில் கருத்துரைத்த அவர், நியமிக்கப்பட்ட நாணயமாக இந்திய ரூபாவை உருவாக்குவது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தீர்வுக்கு உதவுவது மட்டுமல்லாமல், இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் பரிவர்த்தனைகளுக்கும் பயன்படும் என்று குறிப்பிட்டார்.

"நுவரெலிய சீதையம்மன் ஆலயம்" தொடர்பான சிறப்பு தலைப்பை இலங்கையின் பிரதமர் வெளியிட்டு வைத்து ஒருநாள் கழிந்த நிலையில் இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் கருத்து வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், இலங்கையின் பொருளாதார சூழ்நிலை தற்போதைய நிலை மற்றும் முன்னோக்கி' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வருங்கால பொருளாதார ஒத்துழைப்பின் பகுதிகளை எடுத்துரைத்துள்ளார்.