தமிழர் பகுதியில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள்


வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் அண்மைக் காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வீடு உடைத்து நகை, பணம் திருட்டு, மோட்டார் சைக்கிள் திருட்டு, வழிப்பறி கொள்ளை என கொள்ளை சம்பவங்கள் வட்டுக்கோட்டை பகுதியில் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த (30.09.2022) அன்று அராலியில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீடு உடைக்கப்பட்டு கவரிங் நகை களவாடப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த (03.10.2022) அன்று இரவு, அராலி வடக்கில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது.

நேற்றுமுன் தினம் சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டிற்குள் உள்நுழைந்த திருடர்கள் மடிக்கணினி மற்றும் 50 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றினை திருடிச் சென்றுள்ளனர்.

அத்துடன், இன்று காலை நவாலி வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரின் நகையும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இவற்றினை விட மோட்டார் சைக்கிள் திருட்டு, சைக்கிள் திருட்டு என திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.