லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம்: சற்றுமுன் வெளியானது அறிவிப்பு!

இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக  லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி 12.5 கிலோ சிலிண்டர் 95 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு  புதிய விலை ரூபாய் 3,565 ஆகவும்

5 கிலோ சிலிண்டர் 38 ரூபாயினால்  அதிகரிக்கப்பட்டு புதிய விலை ரூபாய் 1,431 ஆகவும் 

2.3 கிலோ சிலிண்டர் 18 ரூபாயினால்  அதிகரிக்கப்பட்டு புதிய விலை ரூபாய் 668 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் நேற்று கூறியமை குறிப்பிடத்தக்கது.