(புதிய இணைப்பு)
குறுகிய கால அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம்
சதொச மற்றும் அரச வர்த்தக (இதர) சட்டபூர்வ கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
அதற்கமைய, நாட்டு அரிசி அதிகளவில் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது. இதற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
(முதலாம் இணைப்பு)
நாட்டில் நிலவும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக நாட்டு அரிசியை உடனடியாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 65,000 மெற்றிக் தொன் நாட்டு அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது.
நாட்டின் அரிசி நெருக்கடி தொடர்பில், அரிசி இறக்குமதியாளர்களுக்கும் சதொச உயர் அதிகாரிகளுக்கும் இடையில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதுடன், எதிர்வரும் பெரும்போக நெல் அறுவடை வரை நாட்டின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவிலிருந்து நாட்டு அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை
அரிசி நெருக்கடி அதிகரிக்கும் பட்சத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என விவசாய அமைச்சர் கே.டி.லாலாகாந்த(k.d.lalkantha) குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தேவையான அளவு அரிசி நாட்டிற்குள்ளேயே இருப்பதாகவும், அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(anura kumara dissanayake) அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.