விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு இறக்குமதி?

விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகம் நிராகரித்துள்ளது.

விஷம் கலந்த அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இரண்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானது என்றும் அந்த அலுவலகம் கூறியுள்ளது.அவ்வாறு வெளியான செய்தியில் எவ்வித ஆதாரமும் இல்லை என பூச்சிக்கொல்லிகள் தொடர்பான பதில் பதிவாளர் லசந்த ரத்னவீர குறிப்பிட்டுள்ளார்.