தாமரை கோபுரத்தை பார்வையிட செல்லும் பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தாமரை கோபுரத்தை பார்வையிட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த நேரம் மாற்றப்பட்டுள்ளது.அதன்படி வார நாட்களில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தாமரை கோபுரத்தை பொதுமக்கள் பார்வையிடலாம் என அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.அதேபோல வார இறுதி நாட்களிலும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை தாமரை கோபுரத்தை பார்வையிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.