அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும் போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் வாகனங்களை மணிக்கு 60 கிலோமீற்றர் வேக வரம்பை பேணுமாறும் வாகன சாரதிகளிடம் பொலிஸார் கேட்டுகொன்டுள்ளனர்.நாடு முழுவதும் நிலவும் காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.