வாகனங்களைப் பதிவு செய்வதற்கும் வாகனங்களைப் பரிமாற்றுவதற்கும் இனி வருமான வரி இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வருமான வரி இலக்கம் இல்லாத கார்களை பதிவு செய்வதற்கு வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளார், எனவே இந்த இலக்கம் இன்றி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் ஏற்கனவே வரி இலக்கங்களைப் பெற்றுக்கொள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            