குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒரு நாள் சேவையின் மூலம் கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்கு எதிர்வரும் 60 நாட்களுக்கான திகதியும், நேரமும் முற்கூட்டியே பதிவு செய்யப்பட்டு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அவசர தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லவுள்ள விண்ணப்பதாரிகள், தாம் அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டியதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை 070 63 11 711 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு வட்ஸ்அப் ஊடாக அனுப்பி திகதியை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            