ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் புதிய பணியாளர் மட்ட உடன்படிக்கைக்கான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கும் தற்போதைய வேலைத்திட்டத்தை மீளாய்வு செய்வதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஆகு) குழுவொன்று இலங்கைக்கு பயணிக்கவுள்ளது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஜனாதிபதியைச் சந்தித்து, தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் நிர்வாகம் முன்மொழிய விரும்பும் மாற்றங்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை தொடர்பில் ஐஎம்எப் அதிகாரிகள் கவலையடைந்துள்ளதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் முடிவதற்கும் பொதுத் தேர்தலுக்கும் இடையிலான இடைக்காலம் குறித்து அவர்களுக்கு சில கவலைகள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.