நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 4ஆவது மீளாய்விற்கு IMF அனுமதி

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு அங்கீகரித்துள்ளது.

 
இந்த அங்கீகாரம் நேற்று வோசிங்டனில் கூடிய நிதியத்தின் நிர்வாகக்குழுவால் வழங்கப்பட்டுள்ளது.

 
முன்னதாக, 2025ஏப்ரல் 25 ஆம் திகதியன்று சர்வதேச நாணய நிதிய பணியாளர்களும் இலங்கை அதிகாரிகளும், இலங்கையின் திட்டத்தின் 4 ஆவது மதிப்பாய்வில் பணியாளர் அளவிலான உடன்பாட்டை எட்டியிருந்தனர்.



இந்த நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதியுதவி US$ 1.74 பில்லியனாக உள்ளது.


 இந்தநிலையில்,  4 ஆவது மதிப்பாய்வு, நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதும், இலங்கைக்கு சுமார் 344 மில்லியன் டொலர் நிதியுதவி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

 
இதற்கான நிபந்தனையாகவே இலங்கையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கவேண்டும் என்ற விடயம் சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்டிருந்தமையும், அதனை அரசாங்கம் கடந்த வாரங்களில் நிறைவேற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.