முடிந்தால் கோட்டாபயவுக்கு எதிராக வழக்குத் தொடருங்கள் அல்லது காவல்துறையில் முறைப்பாடு அளியுங்கள் பார்க்கலாம் என மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்து வராமல் வெளிநாடு ஒன்றிலிருந்து இன்னொரு நாட்டிற்கு அனுப்பியதன் பின்னணியில் சதி இருப்பதாக குற்றம் சாட்டினார்.
மக்கள் போராட்டத்திற்கு முன்னர் பொதுஜன பெரமுனவில் உயர் பதவிகளையும் அமைச்சுப் பதவிகளையும் வகித்த பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச போன்றவர்கள் தற்போது இந்த நாட்டில் பகிரங்க அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் கோட்டாபயவிற்கு சரியான பாதுகாப்பு இல்லை என்று கூறி அவரை வெளிநாடுகளில் தங்க வைத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            