அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெறாவிட்டால்.. கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சுமனரத்ன தேரர்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayaka) வெற்றிபெற்று ஜனாதிபதியாக வராவிட்டால் முழு நாட்டுக்கும் மக்களுக்கும் ஆபத்து என அம்பிடிய சுமனரத்ன தேரர்(Ambitiya Sumanaratna Thero) தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு தான் ஆதரவு வழங்கியதற்கான காரணங்களை விளக்கும் போதே அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் எனவும், அவ்வாறு தெரிவு செய்யப்படாவிடின் நாட்டுக்கும் மக்களுக்கும் ஆபத்து ஏற்படும் எனவும் அவர் மீது நம்பிக்கை உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கைக்கு தான் எதிரானவர் அல்ல என்றும் அதே கருத்தையே கொண்டிருந்ததாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எந்த நன்மையையும் எதிர்பார்த்து ஆதரவளிக்கவில்லை

அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எந்த நன்மையையும் எதிர்பார்த்து ஆதரவளிக்கப் போவதில்லை என்றும், யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர் ஆரம்பித்த வேலைத்திட்டம் தொடரும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.