இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தம் - வெளியானது புதிய தகவல் !

இலங்கை கிரிக்கெட்டின் கோரிக்கைக்கு அமைவாகவே சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிரிக் இன் போ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை எடுப்பதற்காக கூடிய கூட்டத்தில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷமி சில்வா, கலந்துகொண்டிருந்ததாகவும் கிரிக் இன் போ அந்த செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் அஹமதாபாத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை கூடவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்திலும் ஷமி சில்வா கலந்துக்கொள்ளவுள்ளதாக அந்தி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் 2014 முதல் 2015ம் ஆண்டு வரையான காலத்திற்குள் கிரிக்கெட் இடைகால குழுவொன்று செயற்பட்டமையை, சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்றுக்கொண்டிருந்ததாக கிரிக் இன் போ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிகெட்டில் அரசாங்கம் தலையிடுவதைத் தடுக்கும் முகமாக  இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.


நாடு திரும்பியது இலங்கை அணி ! தோல்விக்கான காரணத்தை வெளியிட்ட தேர்வுக்குழு தலைவர் இரு தினங்களில் பலவற்றை வெளிப்படுத்தவுள்ளார் !

உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்றக இந்தியாவுக்கு சென்ற இலங்கை அணி நேற்றுகாலை நாடுதிரும்பியுள்ளது.

இந்தியாவில் இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்று விளையாடிய இலங்கை அணி விளையாடிய 9 போட்டிகளில் இரு போட்டிகளில் மாத்திரம் வெற்றிபெற்று ஏனைய 7 போட்டிகளில் தோல்வியை தழுவியிருந்த நிலையில், நாடு திரும்பியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியினர் நேற்று வெள்ளிக்கிழமை (10) காலை 05.05 மணியளவில் இந்தியாவின் பெங்களூரில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இலங்கை அணியினரை வரவேற்க இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருகையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் பிரமோதய விக்ரமசிங்க,

இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வியின் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட குழுவினர் இருப்பதாக கூறினார்.

அவர்களின் சதித் திட்டமே இந்த படு தோல்விக்கு காரணம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

லும், இலங்கை கிரிக்கெட்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சித்து வருவதாகவும், இது தொடர்பான அனைத்து உண்மைகளும் இரண்டு நாட்களில் ஊடகங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டு இலங்கை மக்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், இலங்கை அணியின் தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த அவர், இலங்கை அணிக்கு இறுதி நேரத்தில் அதிக மன அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும் கூறினார்.

அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு பொது பஸ் ஒன்று தயார் செய்யப்பட்டிருந்த போதிலும், பல வீரர்கள் தங்களது சொந்த கார்களில் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.