அரசியல் இலாபத்திற்காக தூண்டிவிடப்படும் வன்முறைகளை வன்மையாகக் கண்டிக்கின்றேன்-கோட்டாபய!

அரசியல் இலாபத்திற்காக தூண்டிவிடப்பட்டு நடைபெறும் வன்முறைச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.வன்முறை தற்போதைய பிரச்சினைகளை தீர்க்காது என்றும் மக்கள் அனைவரும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.எனவே இந்த நெருக்கடியை தீர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.