பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொல்லவே வந்தேன் என துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.யாரும் தன்னை தூண்டிவிடவில்லை என்றும் இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்ற கோபத்தில் அவரை கொல்ல விரும்பியதாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுதொடர்பான காணொளியை பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளதுடன் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் துப்பாக்கியுடன் மற்றொரு சந்தேகநபர் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்த விடயத்தை பொலிஸார் உறுதி செய்யவில்லை.பஞ்சாப் மாகாணத்தின் வசிராபாத்தில் இம்ரான் கான் நேற்று அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார்.திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்றபோது ஒரு நபர் திடீரென அவரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இதில் இம்ரான் கானின் காலில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து அவர் லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அத்துடன், துப்பாக்கி சூடு நடத்திய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            