தனது மனைவியை கல்லாலும் மற்றும் கூரிய ஆயுதத்தாலும் தாக்கி கொலை செய்த கணவன் நேற்று அதிகாலை நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம், நாவலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நாவலப்பிட்டி, செம்ரோக் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய கயானி தில்ருக்ஷி குமாரி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கணவனுடன் அடிக்கடி ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த பெண் தனது மகளின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் கொழும்பில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று முன்தினம் நாவலப்பிட்டிக்கு செ
இதன்போது, குறித்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கணவன், தனது மனைவியை கல்லாலும் மற்றும் கூரிய ஆயுதத்தாலும் தாக்கி கொலை செய்துவிட்டு பின்னர் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், தாக்குதலின் போது மகளுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            