கர்ப்பம் தரித்து, 10 மாதங்கள் குழந்தையை சுமந்து, பிரசவிக்கக்கூடிய மனித உருவ ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி வருவதாக சர்வதேச ஊடகங்கள் பலவும் தகவல் பகிர்ந்துள்ளன.
சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வைத்தியர் மற்றும் தொழிநுட்ப ஆய்வாளர் ஜாங் கெஃபெங் தலைமையிலான குழு உலகின் முதல் ‘கர்ப்ப ரோபோவை’ உருவாக்கி வருகிறது.
சீன ஊடக அறிக்கைகளின்படி, கர்ப்ப ரோபோக்கள் தற்போது கிடைக்கும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல. இந்த கர்ப்ப ரோபோக்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட கருப்பைகளைக் கொண்டுள்ளன.
செயற்கை அம்னோடிக் திரவத்தால் நிரப்பப்பட்ட இந்த செயற்கை கருப்பை, மனித கருப்பை போலவே செயல்படுகிறது.
நிஜ வாழ்க்கையில், கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு செயல்முறையும் கர்ப்ப ரோபோவின் கருப்பையில் நடைபெறுகிறது.
கருப்பையில் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குழாய்கள் மூலம் வழங்கப்படுகின்றன.
உண்மையில், இந்த செயற்கை கருப்பை ஒரு புதிய முறை அல்ல என்று ஆய்வாய் மேற்கொள்ளும் வைத்தியர் ஜாங் குறிப்பிட்டுள்ளார்.
விஞ்ஞானிகள் முன்பு பயோ பேக் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட செயற்கை கருப்பையின் உதவியுடன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிரசவித்ததாக அவர் விளக்கினார்.
இந்த பயோ பேக் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதன் மூலம் கர்ப்ப ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
கர்ப்ப ரோபோக்களின் மாதிரி அடுத்த ஆண்டு தயாராக இருக்கும் என்றும், இந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாக அமைந்தால், மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட தம்பதிகள் அல்லது உயிரியல் கர்ப்பத்தை தவிர்க்க விரும்பும் தனிநபர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.