ரணிலுக்கு ஆதரவாக கொழும்பில் மாபெரும் பேரணி! மொட்டுக் கட்சியினரும் பங்கேற்பு

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவால் அமைக்கப்பட்ட கூட்டணியின் இரண்டாவது பேரணி நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த கூட்டணியில் அங்கம் வகிப்பதாகவும், அவர்கள் குறித்த பேரணியில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் நோக்கில் பல அரசியல் கட்சிகளும் கூட்டணிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையில் அமைக்கப்பட்ட புதிய கூட்டணியின் பேரணி நாளை ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை நிலையடைய செய்வதை அடிப்படையாக கொண்டு இந்த பேரணி நடைபெறவுள்ளது.

சிறிலங்கா கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த பேரணியில் கலந்து உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.