புலம்பெயர் இலங்கையர்களுக்கு வீடமைப்பு திட்டம்! அனுமதி வழங்கியது அமைச்சரவை

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வீடமைப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உரிமம் பெற்ற வங்கிகளுடன் இணைந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திட்டமிட்டுள்ளது.

அந்த வேலைத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக பத்து மில்லியன் ரூபா கடன் வசதியை வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும், அதற்கான வட்டி செலவில் ஒரு பகுதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்கும் என்றும் அரசாங்கம் கூறுகிறது.

உத்தேச கடன் திட்டத்தின் கீழ் பெறப்படும் கடன் தொகையானது வெளிநாட்டு நாணயத்தில் செலுத்தப்பட வேண்டும் எனவும், கடன் பெற்றவர் வெளிநாட்டில் பணிபுரியும் போது, ​​வெளிநாட்டு வேலை முடிந்து நாடு திரும்பிய பின்னர் இலங்கை ரூபாவில் செலுத்த முடியும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.