கொழும்பு வாழ் 50,000 அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு வீட்டுரிமை!


கொழும்பு மாவட்டத்தில் உள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு உறுதிப் பத்திரங்களை வழங்கும் ஆரம்பக் கட்ட நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

இந்த உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்குச் சட்டமா அதிபரிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபையின் சான்றிதழ் பெற்ற அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் இந்த உறுதிப் பத்திரம் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.