உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றின் தீர்ப்பு வெளியானது



உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது அல்ல என்றும், பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட சட்டமூலம் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே சபாநாயகர்  ஜகத் விக்ரமரத்ன இந்தக் கருத்தை வெளியிட்டார்.

மேலும் சட்டமூலம் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுவதால், அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் மாத்திரமே அங்கீகரிக்கப்பட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்

இதேநேரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் உரிய தினத்தில் நடத்துமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்றையதினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளன.

பதிவு செய்யப்பட்ட 13 கட்சிகளின் செயலாளர்கள் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் பாதீடு விவாதம் மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை என்பன நடைபெறவுள்ளன.

எனவே, இவற்றைக் கருத்திற் கொண்டு உரிய தினத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.