வடமாகாணத்தில் மாவீரர் தினத்தை முன்னெடுப்போருக்கு பாதுகாப்பு தரப்பினர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
அதாவது மாவீரர் தினத்தினை நடத்தும் தரப்பினர் பயங்கரவாதிகளையோ அல்லது அது சார்ந்த அமைப்பையோ பிரசாரம் செய்தாலோ அல்லது ஆடம்பரமான கொண்டாட்டங்களை மேற்கொண்டாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாதுகாப்பு தரப்பினர் எச்சரித்துள்ளனர்.
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள இடத்தை துப்பரவு செய்யும் பணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டதைத் தொடர்ந்தே படையினர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடக்கில் சில பகுதிகளில் உள்ள துயிலுமில்லங்களை துப்பரவு செய்யும் பணிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            