சுகாதார ஊழியர்கள் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்துக்கு முஸ்தீபு : வைத்திய சேவை முடங்கும் அபாயம்

சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அதன் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

அந்த கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவை அரசாங்கம் வழங்கியுள்ளது. எனவே சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்  நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,

மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் வகையில் வேலை நிறுத்தங்களை மேற்கொள்வது நியாயமற்ற செயலாகும்.

மக்கள் பிரதிநிதிகளை தூற்றுவதால் மாத்திரம் நாட்டை கொண்டுச் செல்ல முடியாது.

 அரச அதிகாரிகள் செயல்திறனுடன் மக்களுக்கு சேவை வழங்க கடமைப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.