நாடாளுமன்ற தேர்தல் : கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கும் பிரதமர் ஹரினி

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஹரினி அமரசூரிய(harini amarasuriya) கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

இதற்கான வேட்பு மனுவில் அவர் நேற்று (08)உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் போட்டி

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் 20 பேர் கொண்ட வேட்பாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கவுள்ளனர்.

இதற்கிடையில் புதிய அரசாங்கத்துக்கு போட்டியாக விளங்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவும்(sajith premadasa) போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

எனினும் எந்த மாவட்டத்தில் அவர் போட்டியிடுகிறார் என்பது இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அனேகமாக அவரும் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது