விடுதலைப் புலிகளை நினைவுப்படுத்தும் இஸ்ரேல் மீதான ஹமாஸின் ஈரூடக தாக்குதல்


விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு தாக்குதலின் வெற்றிக்கு பின்னாலும் அதன் புலனாய்வு கட்டமைப்பு தான் இருந்தது. ஏனெனில் புலனாய்வு தகவல் பிழைத்தது என்றால் அனைத்துமே சிக்கலுக்குரியதாகிவிடும் என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.

எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எதிர்த்தரப்பு புலனாய்வாளர்கள் ஒருபக்கம் திசை திருப்பி விடுவார்கள். அப்போதைய நிலையில் தாக்குதலும் தோல்வியில் முடிவடையும்.

எதிரியின் புலனாய்வுத் துறையை முறியடித்து நீங்கள் உங்கள் இலக்கினை அடைய வேண்டும். அதேபோன்றதொரு நிலைதான் தற்போதைய இஸ்ரேல் பிரச்சினையிலும் நடந்திருக்கின்றது.

ஏதோ ஒரு வகையில் அவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்