ஜனாதிபதி ரணிலின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்கிறார் ஹக்கீம் : பிளவுப்படுமா சஜித் கூட்டணி?


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இதுவரை எவ்வித முடிவுகளையும் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கருத்து தெரிவிக்கையில்,

"ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ளோம். அந்த அணியுடன் பயணிக்கவே எதிர்பார்க்கின்றோம்.

தற்போதைய சூழ்நிலையில் சஜித்தை ஆதரிக்கும் முடிவிலேயே இருக்கின்றோம்.

எனினும், கட்சி மாற்று முடிவை எடுத்தால் அது பற்றியும் பரிசீலிக்க வேண்டிவரும்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதியின் ரணிலின் சகாக்கள் அறிவிப்புகளை விடுத்திருந்தாலும், ரணில் விக்கிரமசிங்க இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

அந்த அறிவிப்பை ரணில் விக்கிரமசிங்க விடுக்கும்வரை நம்ப முடியாது. தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியே வெற்றிபெறும் என்ற அதிக நம்பிக்கை உள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.