கொழும்பில் இன்று அதிகாலை பரஸ்பர துப்பாக்கி சூட்டு மோதல் : அதிரடிப் படையினரால் சுட்டுகொல்லப்பட்ட நபர்

 
 

கொழும்பு, தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி காலை நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இன்று அதிகாலை அதிரடியாக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறப்பு அதிரடிப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 4:30 மணியளவில், கெந்தல்லாவிட்ட, பஹலகம, கஹதுடுவ பகுதியில் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டை பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் குழு சோதனை செய்ததனர்.

இதன்போது அங்கு மறைந்திருந்த சந்தேக நபர் சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகளும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த விசேட அதிரடிப் படை உறுப்பினர் ஒருவர் களுபோவில பயிற்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
உயிரிழந்த சந்தேகநபரின் உடல் மேலதிக விசாரணைகளுக்காக வேதர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதிரடிபடையினரால் சுட்டுகொல்லப்பட்ட குறித்த நபர் கடந்த 18 ஆம் திகதி தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தார்.

எனினும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய 45 வயதான களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் துப்பாக்கிதாரி கஹதுடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் இன்று அதிகாலை சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த துப்பாக்கிதாரி இராணுவத்தின் சிறப்பு அதிரடி படையில் பணிபுரிந்து இருந்தாகவும் போதைப்பொருளுக்கு அடிமையானமையால் அவர் பணியிலிருந்து விலக்கப்பட்டிருந்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.