பலப்பிட்டிய, ஹீனட்டிய வீதியில் உள்ள பெட்டிவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த தாக்குதல் இன்று (09) பிற்பகல் இடம்பெற்ற நிலையில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தாக்கப்பட்ட நபர் பலபிட்டிய, மஹலதுவ பகுதியைச் சேர்ந்த பெட்டா என்ற நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.