இலங்கை இந்திய உடன்படிக்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்ட கூட்டணியால் மஹரகம பகுதியில் நடத்தப்பட்ட துண்டுபிரசுர விநியோகம் மற்றும் கையெழுத்து நடவடிக்கைகளுக்கான கூடாரத்தை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தமையினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலைமையொன்று ஏற்பட்டது.
மக்கள் போராட்ட கூட்டணியினர் வெள்ளிக்கிழமை முற்பகல் மஹரகம பகுதியில் இலங்கை இந்திய உடன்படிக்கைகளை மற்றும் சர்வதேசநாணய நிதியத்துடனான உடன்படிக்கை ஆகியவற்றை கிழித்தெரிய வேண்டும் என்று வலியுறுத்தி பதாகைளை காட்சிப்படுத்திதுண்டு பிரசுர நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், அங்கே கூடாரமொன்றை அமைத்து கையெழுத்து பெறும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
இதன்போது மக்கள் போராட்ட அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும் முறுகல் நிலைமைஏற்பட்டது.