2021ம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு!

2021ம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.2943 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அத்துடன் 2021ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2022ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ம் திகதி முதல் மார்ச் 5ம் திகதி வரை நடைபெறவுள்ளது.2438 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.