அரசாங்கம் மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கு காரணங்களை தேடி வருவதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அகில  இலங்கை ஜமயத்துல உலமா அமைப்பின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நாட்டில் மழை பெய்வது குறைந்து விடும் எனவும் அதனை காரணம் காட்டி மின் கட்டணங்களை உயர்த்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அதிகளவான நீர் மின் உற்பத்தி செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் மின்சார உற்பத்தியை முகாமைத்துவம் செய்யத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நீர் மின், காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்திகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாறாக செலவு கூடிய மின்சார உற்பத்தி முறைமைகளுக்கு கூடுதல் முன்னுரிமை அளித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே மின்சாரக் கட்டணங்கள் அதிகரித்தாலோ அல்லது மின்வெட்டு முன்னெடுக்கப்பட்டாலோ அதற்கான பொறுப்பினை அரசாங்கமும் துறைசார் அமைச்சருமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலவசமாக கிடைக்கும் மின்சார உற்பத்தி பயன்பாட்டை குறைத்து மக்கள் மீது கட்டணச் சுமையை திணிக்க அரசாங்கம் முயல்கின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            