புதிய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத் திட்டத்தை தடம் புரளாமல் முன்னெடுத்துச் செல்லும் என்று தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபையின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் முன்னைய அரசாங்கத்தின் அணுகுமுறையில் இருந்து மாறுபட்ட வகையில் திட்டத்தின் நோக்கங்களை பூர்த்தி செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நியாயமான பகிரும் திட்டங்களையும், வலுவான நிதி ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் வருமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கும் என்று அனில் ஜயந்த குறிப்பி;ட்டுள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின் அரச நிறுவன மறுசீரமைப்புத் திட்டங்கள் தனியார் நலன்களுக்குப் பயனளிக்கும் வகையில் அமைந்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் தமது அரசாங்கம், தாமதமின்றி கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்புவதாகவும் அனில் ஜயந்த கூறியுள்ளார்.
இதேவேளை இந்த மாத ஆரம்பத்தில், பத்திரதாரர்களுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக கொள்கை ஒப்பந்தத்திற்கு வந்ததாக முன்னைய அரசாங்கம் அறிவித்ததையும் அனில் ஜெயந்த சுட்டிக்காட்டியுள்ளார்.