''பொன்சேகாவை நம்பியே கோட்டபாய கதைத்தார்... குரல் பதிவை வெளியிட்டால் இதுவே அவருக்கு நடக்கும்.." எச்சரிக்கும் நாமல்

சரத் பொன்சேகாவிடம் குரல் பதிவு இருந்தால் அதை அவர் வெளியிடட்டும் என பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச சவால் விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

சரத்பொன்சேகாவிடம் குரல் பதிவு இருந்தால் அதை அவர் வெளியிடட்டும். அதற்குரிய உரிமை அவருக்கு உள்ளது. கோட்டாபய ராஜபக்ச பொன்சேகாவுடன் நம்பி கதைத்திருக்கக்கூடும். இவ்வாறான நிலையில் அந்த குரல்பதிவை வெளியிட்டால் தற்போது பொன்சேகாவை நம்புபவர்களின் நிலை என்னவாகும் என அவர் கேள்வியெழுப்பினார்.


 வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதியன்று அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிடம் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.ஆகவே வெள்ளைக் கொடி தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பான குரல் பதிவு ஒன்று என்னிடம் உள்ளது அதனை வெகுவிரைவில் வெளியிடுவேன் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வெள்ளைக் கொடி விவகாரம் ராஜபக்ஷர்களின் சூழ்ச்சி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மூவரடங்கிய நீதியரசர் குழாமில் தலைமை தாங்கிய நீதியரசர் விஜேயசுந்தர, மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்.

இவரது மகளின் திருமணத்துக்கு ராஜபக்ஷ சென்றுள்ளார். டொயேடா கார் ஒன்றையும் பரிசளித்துள்ளார்.
இந்த மூவரடங்கிய நீதியரசர் குழாமில் இருந்த நீதியரசர் வராவெல எனக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய போது நீதியரசர் விஜேசுந்தர அவரை தகாத வார்த்தையால் கடுமையாக திட்டியுள்ளார்.ஆகவே வெள்ளைக் கொடி விவகாரம் எனக்கு எதிரான செயற்பாடு என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.