சி.ஜ.டியில் முன்னிலையான கோட்டாபய - ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம்


முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று விசாரணை செய்துள்ளனர்.  

கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவம் ஒன்று தொடர்பில் அவரிடம் ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பின் பக்க வீதியால் அவர் திணைக்களத்திற்குள் சென்றதாக அங்கிருந்த எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸவிடம் முன்னதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது