கோட்டாபய - மகிந்த மீது கடுமையான நிலைப்பாடு! கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


ரணில்-மகிந்த ராஜபக்ச கூட்டணி அரசால் சர்வதேச ராஜதந்திர நெருக்கடிகளை ஏற்படுத்த முடியாது என கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

மேலும் ஹரி ஆனந்த சங்கரி தெரிவிக்கையில்,"நாங்கள் எமது அரசாங்க கொள்கைகளுக்கு அமைய எமது கடமைகளை செய்துகொண்டு வருகின்றோம். இதற்கு பின்னால் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாங்கள் ஜெனிவா மற்றும் இலங்கையில் பலரை சந்தித்துள்ளோம். அவர்களுடைய வேதனைகளால் தான் நாம் இந்த தடையை கொண்டுவர சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களை பற்றி நாம் யோசித்து அவர்களுக்கான ஆதரவை நாங்கள் வழங்க வேண்டும்.

இந்த தடைகளை கொண்டு வருவது சிக்கலான விடயம் தான்.ஏன் என்றால் ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு நாடுகளுடன் வெவ்வேறு விதமான உறவுகளை வைத்திருப்பார்கள். இவ்வாறான ஒரு நிலைமையில் இப்படி ஒரு தடையை கொண்டுவரும் போது அதுவும் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி இருவருக்கு இப்படி ஒரு தடை கொண்டு வருவது மிகவும் கஷ்டமான விடயம்.

இருந்தாலும் இவர்கள் செய்த அநியாயங்களுக்கு கனடா தனிப்படட முறையில் வேறு ஏதும் செய்வதற்கான சந்தர்ப்பம் குறைவு. ஆனாலும் இப்படி ஒரு முடிவு எடுத்ததற்கு காரணம் வேறு நாடுகளும் இவ்வாறான தடைகளை கொண்டு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் தான்.” என கூறியுள்ளார்.