முன்னறிவிப்பின்றி நாடாளுமன்றம் சென்ற கோட்டாபய - “கோ ஹோம் கோட்டா” என கொந்தளித்த எதிர்த்தரப்பு!

நாடாளுமன்ற அமர்வு நேற்றைய தினம் ஆரம்பமாகியிருந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக அமர்வு இடம்பெறுகின்றது.

நேற்றைய தினம் அமர்வு ஆரம்பமான போது பிரதமர் மற்றும் அரச தலைவர் பங்கு பற்றாமை இருந்தமையை எதிர்த்தரப்பினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்நிலையில் இன்றைய அமர்வில் பிரதமர் மற்றும் அரச தலைவர் பங்குபற்றியிருந்தனர்.

இதன் போது நாடாளுமன்றத்தில் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

பிரதமரின் உரை உள்ளிட்ட சபை அமர்வுகளை அவதானிப்பதற்காக முன்னறிவிப்பு இல்லாமல் கோட்டாபய நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு எதிராக கோ ஹோம் கோட்டா என கோஷமிட்டு எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சபை நடவடிக்கை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

இந்நிலையில் சற்று முன்னர் கோட்டாபய நாடாளுமன்றை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.