Google maps இணையம் இல்லாமல் பயன்படுத்துவது எப்படி? Offline டிப்ஸ்

இணையம் இல்லாமலும்  Google maps செயலியை பயன்படுத்துவது எப்படி என்று எங்கு பார்க்கலாம். நீங்கள் உங்கள் மொபைலில் நோவிகேஷிசனை அமைத்தலே போதும் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்ல உங்களுக்கு படிப்படியாக வழிகளை காட்டுவதோடு, டிராபிக் பற்றிய தகவலையும் செல்லும். Google maps சை  இன்டர்நெட் இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். இணையம் இல்லாத இடம், நெட் வெர்க் கனைக்சன் இல்லாத இடத்தில் பயன் படுத்த முடியாது. ஆனால்  இன்டர்நெட் இல்லாத இடத்தில் Google maps  சை எப்படி பயன் படுத்தலாம் என்று இப்போது பார்க்கலாம். முதலில் உங்கள்   Android  மொபைலிலும் apple ios யிலும் Google maps பை offline பயன்படுத்தலாம். முதலில் உங்கள் சாதனத்தில்  Google maps செயலியை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். நீங்கள்  செயலியை டவுன்லோட் செய்யும் போது இன்காக்னிட் டோ மோடில் இருக்கக்கூடாது.   இன்டர்நெட் கனைக்சன் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். உங்கள் திரையில்  மேற்புற வலது மூலையில் தேடல் பேனில் உள்ள ப்ரொபைல் புகைப்படம் இருக்கும் அதை  கிளிக் செய்யவும். உங்கள் திரையில் ஒரு மெனு தோன்றும். அந்த மெனுவில் 'offline maps' இருக்கும். நீங்கள்  offline maps தேர்வின் கீழ் உள்ள 'select your own map ' என்பதை கிளிக் செய்யதத்துடன் ஒரு map உங்கள் திரையில் தோன்றும். அந்த மேப்பை நீங்கள் பெரிதாக்கி எந்த இடம் பற்றிய தகவல் உங்களுக்கு வேண்டும் என்று நீல நிற பெட்டிக்குள் தேர்வுசெய்ய வேண்டும். நீங்கள் இந்த பெட்டியில்  இடம் பற்றி  தேட முடியாது. இடத்தை தேர்வுசெய்ய மட்டுமே  முடியும். நீங்கள் தேர்வுசெய்ததுடன்  திரையில் கீழ் இருக்கும் நீல நிற போஸ் மீது கிளிக் செய்து அந்த இடம் பற்றிய மேப்பை டவுண்லோட் செய்யவும். அவ்வளவு தான் நீங்க   தேர்வுசெய்த இடத்தின் Google map பை இனி அறியமுடியும்.