அமெரிக்க செல்ல விரும்பும் இலங்கை மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்


அமெரிக்கா வெளிநாட்டு இளங்கலை பட்டதாரிகளுக்கான உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை  அமெரிக்க வெளியுறவுத்துறையின் கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பணியகம் வெளியிட்டுள்ளது.

கல்வி கற்க ஆர்வமுள்ள இலங்கை இளங்கலை மாணவர்கள் ‘Global UGRAD 2023’திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த விண்ணப்பங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதரகம் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு இணையத்தளத்தை பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.