உலகளவில் அதிகரிக்கும் கொரோனா-இலங்கைக்கு ஆபத்து!

உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இலங்கைக்கு சில ஆபத்துகள் இருப்பதாக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.இவ்வாறானதொரு நிலையைத் தடுப்பதற்கு பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமானது என தொற்றுநோய் பிரிவின் தலைவர் டொக்டர் சமித்த கினகே தெரிவித்தார்.ஒமிக்ரோன் வகையின் பல புதிய வகைகள் உலகம் முழுவதும் பதிவாகியுள்ளதாகவும் முன்னர் அறிவிக்கப்பட்ட ஒமிக்ரோன் வகைகளைவிட இது வேகமாகப் பரவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 03 மாதங்களில், இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10 முதல் 15 வரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு என பதிவாகுவதாகவும் இதற்கு தடுப்பூசி ஏற்றமே காரணம் என்றும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.