தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் : ஜெனிவாவில் பேர்ள் அமைப்பு வலியுறுத்து

இலங்கையின் குற்றவாளிகளைப் பொறுப்புக்கூற செய்வதற்கு சர்வதேச மயமாக்கப்பட்ட பொறிமுறைகளை சர்வதேச சமூகம் பயன்படுத்த வேண்டும் என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்துக்கான மக்கள் அமைப்பான பேர்ள் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 54 ஆவது அமர்வின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்த கலந்துரையாடல்களின் போதே பேர்ள் அமைப்பு தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றை நினைவு கூர்ந்துள்ளது.

நீதிக்கான முயற்சிகள் இலங்கை அரசினதும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளினதும் விருப்பத்திலேயே தங்கியுள்ளது என மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தெரிவித்துள்ளது.

எனினும், இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சியாளர்கள் தங்கள் நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்புப் படையினர் குறித்தும் சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க தவறியுள்ளனர் எனவும் பேர்ள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.