புலிகளின் ஆட்சியில் இல்லை படைகளின் ஆட்சியில் தாராளம் - வெளியாகிய எச்சரிக்கை

வடக்கு மாகாணத்தின் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் பாவனை இருக்கவில்லை ஆனால் தற்போது படைகளின் காலத்தில் இவை தாராளமாக இருப்பது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும்.

 தமிழரின் உரிமைப் போராட்டம் குறித்த சிந்தனையே இளைஞர்களிடத்தில் மழுங்கடிக்கும் நோக்குடன் போதைப் பொருள் விற்பனையில் பாவனையும் வடக்கு மாகாணத்தில் செய்கிறார்களா என்று சந்தேகம் என்னிடம் இருக்கிறது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து கூறுகையில் லேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் ஆட்சியில் இருந்த காலத்தில் போதைப் பொருள் விற்பனை, போதைப்பொருள் பாவனை இருக்கவில்லை.

அவர்களின் காலத்தில் வடக்கில் போதைப்பொருள் சம்பந்தமான எவ்வித பிரச்சினையும் இருக்கவில்லை.

அவர்களுக்குப் பின்னர் வடக்கு மாகாணத்திற்கு இராணுவத்தினர், கடற்படையினர், விமானப் படையினர், காவல்துறையினர் வந்த பின்னர் இங்கே எவ்வாறு போதைப்பொருள் விற்பனை கூடியது என்பது தொடர்பில் நாங்கள் சிந்தித்து பார்க்கவேண்டும்.

 இந்த விடயத்தில் காவல்துறையினர் கூடிய அளவு அக்கறை காட்டி விசாரணைகளை மேற்கொள்கிறார்களா அல்லது அவர்களுடன் சேர்ந்து ஏதாவது நடவடிக்கைகள் நடைபெறுகின்றனவா என்ற பல்வேறு விதமான சந்தேகங்கள் இருக்கின்றன.

ஆகவே வடக்கு கிழக்கு மாகாணங்களை எங்களிடத்தில் ஒப்படைத்து நிர்வாகம் செய்வதற்கு அதிகாரம் செலுத்துவதற்கு இடமளித்தால் இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த முடியும். வெளியிலிருந்து வருபவர்கள் இருக்கும் வரையில் இவ்வாறு நடவடிக்கைகள் கூடிக்கொண்டே தான் போகும் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இளைஞர்களுக்கு இந்த போதைப்பொருள் பாவனையை கூட்டி அவர்களுக்கு அதன் ருசியை கொடுத்து அவர்கள் தங்களுடைய சுதந்திரம் சம்பந்தமாக உரிமைகளை சம்பந்தமாக நடவடிக்கைகளை எடுக்காது அவர்களை தூங்க வைக்கும் நிலைக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்குடன் இவ்வாறான போதைப்பொருள் விற்பனை இடம் இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

அதாவது தமிழரின் உரிமைப் போராட்டம் குறித்த சிந்தனையை இளைஞர்களிடத்தில் மழுங்கடிக்க போதைப்பொருள் விற்பனை வடக்கு மாகாணத்தில் செய்கின்றார்களா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது எனவும் தெரிவித்தார்.