நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!

இன்று (8) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் அறிவித்துள்ளார்.அதன்படி 12.5 கிலோ 246 ரூபாயாலும் 5 கிலோ 99 ரூபாயாலும் 2.2 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 45 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளது.