மாணவியை கடத்தும் கும்பல் : திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள்


 
கண்டி கெலிஓயா அம்பரப்பொல பகுதியில், பாடசாலை மாணவியொருவர் வேனில் கடத்தப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம், கெலிஓயா அம்பரப்பொல பகுதியில் நேற்று பதிவாகியுள்ளது.

பாடசாலை முடிந்து வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இரு மாணவிகளில் ஒருவரை, அங்கு வந்த கறுப்பு நிற வேனில் இருந்து இறங்கிய நபர் ஒருவர் கடத்த முற்பட்டுள்ளார்.

இதனையடுத்து மற்றுமொரு மாணவி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

எனினும் அந்த பாதையில் பயணித்த இளைஞர் ஒருவர் குறித்த சிறுமியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

எனினும் அந்த இளைஞரையும் சேர்த்து இழுத்துக்கொண்டு வேன் வேகமாக பயணிப்பதை சிசிடிவி காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.